ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


இந்நிலையில், அரசு தரப்பு தெரிவித்ததாவது, எல்லா மத நம்பிக்கையும் பாதுகாத்து, தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக நீடிக்கவே விரும்புகிறோம் என வாதம்  வைத்தது.


இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.


வழக்கு:


தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. 


தமிழ்நாட்டில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்து,  இதர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனவரி 29 ஆம் தேதி அணிவகுப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்க கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி காவல்துறையிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கில், கடந்த முறை நீதிபதிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட வாரியாகத்தான் முடிவு எடுக்க முடியும் என்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்தது. 


இதை கேட்ட நீதிபதிகள், இதே போன்ற நடைமுறைதான், மற்றவர்களுக்கும் பின்பற்றப்படுகிறதா என்றும், இது குறித்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டது


இந்நிலையில், அரசு தரப்பு தெரிவித்ததாவது, எல்லா மத நம்பிக்கையும் பாதுகாத்து, தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக நீடிக்கவே விரும்புகிறோம் என வாதம்  வைத்தது.


இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.