மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம் மற்றும் திட்டச் செலவு அதிகரிப்பு காரணமாகவே அங்கு எய்ம்ஸ் மருத்துவனை கட்டுவது தாமதமாகி விட்டது. ஆனாலும் விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மதுரை எய்ம்ஸ் திட்டம்

 

தென் மாநிலங்களின் மருத்துவ தேவையை பூர்த்திசெய்யும் வகையில்  மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை  அமைப்பதற்காக கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி 27 பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார். அந்த விழாவில் 45 மாதங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

 




 

எய்ம்ஸ் கட்ட தாமதம்

 

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகள் எதுவும் தொடங்கப்படாத காரணத்தினால் மிகப்பெரிய அரசியல் பேச்சாக மாற்றப்பட்டு தமிழக அரசியல் தொடங்கி பாராளுமன்றம் வரை பேசுபொருளாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம்  லோக்சபாவின் கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்வி எழுப்பிய போது மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பாவார்..”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம் மற்றும் திட்டச்  செலவு அதிகரிப்பு காரணமாகவே அங்கு எய்ம்ஸ் மருத்துவனை கட்டுவது தாமதமாகி விட்டது. ஆனாலும் விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கும்' என்று மத்திய அரசு சார்பில் தெரிவித்தார்.
 




மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் விளக்கம்

 

மேலும் இணை அமைச்சரின் அவரின் விரிவான தகவலில்..” மதுரை எய்ம்ஸ் குறித்த  கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. இதற்காகவே மதுரையில் எய்ம்ஸ் விரைவாக கட்டிமுடிக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். இதற்காகவே மதுரையில் எய்ம்ஸ் விரைவாக கட்டிமுடிக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த பணிகள் மாநில அரசுடையது. நிலம் கையகப்படுதும் பணி முடிந்தாளும் கொரோனா பேரிடர் நிலையேற்பட்டுவிட்டது. ஜெய்க்காவுடன் சேர்ந்து செய்யப்பட்டும் பணி இது. காலதாமதம் காரணம் ஏற்பட்டதால் 1200 கோடியில் இருந்த திட்டச் செலவு 1900 கோடி ரூபாயாகிவிட்டது. அதன் திட்ட ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டது.  திட்ட நிர்வாக ஆலோசகர் நியமனமும் முடிந்துவிட்டது. மாஸ்டர் பிளான் தயாராகிவிட்டது. டெண்டர் விடும் பணியும் முடிந்துவிட்டது. இது குறித்து யாரும் கவலையடைய வேண்டாம். செலவீனம் அதிகரித்துள்ளதால் தாமடைந்துள்ளது. மற்றபடி மதுரையில் எய்ம்ஸ் கட்டும் பணி துவகங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.