உசிலம்பட்டியில் காவல் நிலையம் அருகிலேயே கஞ்சாவுடன் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டல ஐஜி தலைமையிலான சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். குற்றங்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளின் உறவினர்கள் சொத்துக்கள் முடக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் சதவீதம் குறைந்து வருகிறது. இருப்பினும் குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வடுகின்றனர். இந்நிலையில் மதுரை, உசிலம்பட்டியில் காவல் நிலையம் அருகிலேயே கஞ்சாவுடன் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா மட்டுமல்லாது போதை மாத்திரைகளும் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்-ன் தனிப்பிரிவு போலிசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது உசிலம்பட்டி தாலூகா காவல் நிலையம் அருகிலேயே உள்ள பங்களாமேடு பகுதியில் சந்தேகப்படும் படி இருசக்கர வாகனத்தில் வந்த உசிலம்பட்டி கருப்புக்கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சரவணன், குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், கவண்டன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் சோதனை நடத்திய போது 2 கிலோ கஞ்சா மற்றும் 48 போதை மாத்திரைகள் கைப்பற்றபட்டது.




இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் பதுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக கண்காணிப்பு செய்யப்பட்டு குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.


உசிலம்பட்டி தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடிப்பு.. ரூ. 9 லட்சம் ரொக்கத்தை சுருட்டிய பெண்..!




உசிலம்பட்டி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற இந்த போதை மாத்திரைகளை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணியாற்றும் ஜெயராமன் மற்றும் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் கண்ணன் என்பவர் இணைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும், கூடவே பிரகாஷ், சரவணன், பாண்டியன் என்ற கூட்டாளிகளுடன் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து பிரகாஷ், சரவணன், ஜெயராமன், பாண்டியன் மற்றும் கண்ணன் என்ற 5 பேரை கைது செய்த போலீசார் இந்த கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு