உசிலம்பட்டியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து மல்லிகை 1300க்கு விற்பனை - பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று இரு மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது., குறிப்பாக மல்லிகை - 1300 ரூபாய்க்கும், பிச்சி - 700 ரூபாய்க்கும், முல்லை - 700 ரூபாய்க்கும், அரளி - 500 ரூபாய்க்கும், செண்டு பூ - 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது., இதே போல் கோழி கொண்டை - 50 ரூபாய்க்கும், செவ்வந்தி - 200 ரூபாய்க்கும், சம்பங்கி - 150 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் - 200 ரூபாய்க்கும், துளசி - 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை மல்லிகை - 300 ரூபாய்க்கும், பிச்சி - 250 ரூபாய்க்கும், முல்லை - 200 ரூபாய்க்கும், அரளி - 100 ரூபாய்க்கும், செண்டு பூ - 10 ரூபாய்க்கும், கோழி கொண்டை - 10 ரூபாய்க்கும், செவ்வந்தி - 30 ரூபாய்க்கும், சம்பங்கி - 30 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் - 40 ரூபாய்க்கும், துளசி - 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது., குறிப்பாக ஆயுத பூஜைக்கு பயன்படுத்தக் கூடிய செண்டு பூ, செவ்வந்தி, துளசி உள்ளிட்டவைகளின் விலை கடந்த வாரம் வரை 10 ரூபாய்க்கும் கீழ் விற்கப்பட்ட நிலையில் தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக மல்லிகை பூக்களின் வரத்து குறைவு மற்றும் பண்டிகை காலம் என்பதால் மல்லிகை பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இரு மடங்கு உயர்ந்து 1300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,





 

அதே போல் ஆயுத பூஜையை முன்னிட்டு மாட்டுத்தாவணி மலர்சந்தையில் மல்லிக்கை பூவின் விலை  கிலோ 1200க்கு விற்பனை மேலும் பல பூக்களின் விலை அதிகரிப்பு  - மல்லிகைப்பூவின் விலை மேலும்  உயர வாய்ப்பு.

 

ஆயுத பூஜையை முன்னிட்டும் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் இன்று காலை மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு 1200ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ 800ருபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 600க்கும், சம்மங்கி கிலோ 300ரூபாய்க்கும்,  அரளி கிலோ -600ரூபாய்க்கும், வெள்ளை அரளி கிலோ -200ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 280 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 800ரூபாய்க்கும், வாடாமல்லி கிலோ 80ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் கிலோ 300ருபாய்க்கும் மலர்சந்தையில் நேற்றை விட. இன்று சற்று காலை முதல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதபூஜை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும்,  மழை காரணமாக மல்லிகைப்பூவின் வரத்து குறைவால் மல்லிகைப்பூவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.