Madurai: நவராத்திரி 8-வது நாள் விழா: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்!

மீனாட்சி அம்மன் நவராத்திரி 8 ஆவது நாள் விழாவை முன்னிட்டு மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Continues below advertisement

கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது.

Continues below advertisement

 

தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா  தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15ம் தேதி தொடங்கி நவராத்திரி விழா வருகிற 23ந் தேதி வரை  நடக்கிறது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாமியின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவனின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் நவராத்திரி 8ஆவது நாளில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் காட்சி அளித்தார். அப்போது மீனாட்சியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மீனாட்சியம்மனுக்கு முன்பு அலங்கார தொட்டியில் விநாயகர் உருவில் நீர்க்கோலம் வரையப்பட்டு இருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவையொட்டி 23-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜை காலங்களில் பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது. ஆனால் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படவில்லை.
 
Continues below advertisement