பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பொங்கல் பண்டிகையின் முக்கியமான விஷயங்களில் ஒன்றான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.


இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்த பாலமுருகன் என்ற 18 வயது இளைஞரின் நெஞ்சில் மாடு முட்டியதில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது வரை சுமார் 65 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வருகிறது. கடைசி சுற்றின் முடிவில் காயம் அடைந்தவர்களின்  மொத்த விவரங்களும் தெளிவாக தெரியவரும்.


 






காயமடைந்தவர்கள் விபரம் 


5-வது சுற்று முடிவில் : 


மாடுபிடி வீரர்கள்: 23


மாட்டின் உரிமையாளர்கள் : 21


பார்வையாளர்கள் : 6


மொத்தம்  : 50


மேல் சிகிச்சைக்காக : 13


முன்னதாக ஒவ்வொரு சுற்றுக்கும் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. அதில் இரண்டாவது சுற்றின் (2nd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 145 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.  மூன்றாவது சுற்றின் (3rd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஐந்தாவது சுற்று முடிவில் (5th Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 405 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.நான்காவது சுற்றின் (4th Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 325 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஆறாவது சுற்று முடிவில் (6th Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 528 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. தற்போது 7ஆவது மற்றும் கடைசி சுற்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகளை  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரலையில் காண: 


 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க:பொங்கல் பரிசுக்கு வாங்கப்பட்ட 100 டன் வெல்லத்தை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?