Karthigai Deepam Serial Today Episode: தமிழின் முன்னணி தொலைக்காட்சியில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். கார்த்திகை தீபம் தொடரில் நேற்று எபிசோடில் கோவில் திருவிழாவில் சாமுண்டேஸ்வரி தரப்பில் சிலம்பாட்டம் ஆட இருந்த நபர் திடீரென வர இயலாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


15 சவரன் தங்கச்சங்கிலி:


அதாவது, சாமுண்டேஸ்வரி தரப்பில் போட்டியில் பங்கேற்க யாரும் இல்லை என்பதால் தனக்கு ஆதரவாக போட்டியில் பங்கேற்று ஜெயித்தால் 15 சவரன் தங்கச் சங்கலியை பரிசாக கொடுப்பதாக அறிவிக்கிறான். இந்த நிலையில் கார்த்திக் போட்டியாளராக களத்தில் இறங்கி சிவனாண்டியை ஓட விடுகிறான். இதையடுத்து சாமுண்டேஸ்வரி புவனேஸ்வரியை கூப்பிட்டு பரிசை கொடுக்க, அவன் நான் இந்த பரிசுக்காக இந்த போட்டியில் கலந்துக்கல என பதிலடி கொடுக்கிறான். 


நாயகி கழுத்தில் விழுந்த செயின்:


நீங்க யாரும் ஆம்பளையே இல்லையா என கேட்டதால் தான் கலந்துக்கிட்டேன். எனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று சொல்லி குச்சியில் ஜெயினை வாங்கி அதை அப்படியே தூக்கி வீச அப்போது அந்த வழியாக வந்த நாயகி ரேவதி கழுத்தில் விழுகிறது. 


இதை கவனிக்காத கார்த்திக் மீசையை முறுக்கி விட்டபடி கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.