100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு:


நாடு முழுவதும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மகளிர்த்திட்டம் சார்பாக  விழிப்புணர்வு பேரணி தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பத்தில் மகளிர் திட்டம் சார்பாக மகளிர் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


NDA Alliance: பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு; ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?




விழிப்புணர்வு பேரணி:


இந்த விழிப்புணர்வு பேரணியை கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் துவக்கி வைத்தார். இந்தப் பேரணியானது கம்பம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலை வழியாக காந்தி சிலை வரை சென்று முடிவடைந்தது. மேலும் இந்த பேரணியில் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பெண்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.


CSK New Captain: முடிவுக்கு வந்த தோனியின் சகாப்தம்; சென்னை அணியின் புதிய கேப்டனான இளம் சிங்கம்!




100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி  மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சஜீவனா கொடி அசைத்து துவங்கி வைத்தார், இந்த பேரணியை தெடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் வட புதுப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்தலில் பொதுமக்கள் 100%  வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, அனைத்து கிராமங்களிலும் மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில்  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Lok Sabha Election: 20 தொகுதிகளில் பாஜக; கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதி - அண்ணாமலை அறிவிப்பு




பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்:


இதேபோல் வடபுதுப்பட்டியில் கூடியிருந்த பொது மக்களிடம் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 100% வாக்களிப்பை முன்னிறுத்தி வரையப்பட்ட பிரம்மாண்ட கோளத்துக்கு முன்பாக அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.