வத்தலக்குண்டு அருகே புதிதாக திறக்கப்பட இறந்த சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

புதிய சுங்கச்சாவடி:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் எந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்பட்ட நிலையில்  தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழி சாலை மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது

இந்நிலையில் இந்த இரு வழி சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.நான்கு வழி சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

இதையும் படிங்க; EPS Vs BJP: “நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி...

அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி: 

இந்நிலையில் இன்று காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு சுங்கசாவடி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ததுஇதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இன்று காலை 8 மணிக்கு சுங்கசாவடி செயல்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பு எழுந்த நிலையில் அந்த கிராம மக்கள் திடீரென சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. 

இதையும் படிங்க; Train cancelled: மீண்டும் ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்.. பயணிகளே உஷார்!!

இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவியது. இந்நிலையில் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விவசாயிகள் பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் அப்பகுதியில் கட்சிக்காரர்கள் பலர் குவிந்து வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வத்தலகுண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சம்ப்வம் நடந்த  இடத்திற்கு காவல்துறை மற்றும் அதிகாரிகள் இதுவரை இன்னும் வரவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.