ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, சரியான பதிலை யார் நாகரீகமானவர்கள் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்” என்றார்
புதிய நியாயவிலை கடை திறப்பு
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சின்ன மாங்குளம் ஊராட்சியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள இந்திரா நகரில் உள்ள பகுதி நேர நியாய விலைக் கடை கட்டி முடிக்கப்பட்டு திறக்காமல் உள்ளதாகவும், அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை ஆய்வு செய்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் இந்திரா நகரில் புதிய நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள அறிவறுத்தினார். அதன் பேரில் அந்த பகுதியில் அருகில் உள்ள 4 கிராம மக்கள் பயன்பெறுக்கின்ற வகையில் வாரம் இரு முறை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் புதிய நியாயவிலை கடை கட்டிடத்தை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு
மதுரையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 22 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்..,” ஒரே நாளில் 22 கோடி மதிப்பிலான நியாயவிலை கடைகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் என மக்களின் பயன்பாட்டிற்கு பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைத்துள்ளேன். திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு, இங்கு குறை நிவர்த்தி செய்யக்கூடிய மனுக்களும் பெறப்பட்டு அந்த மனுக்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
மத்திய அமைச்சருக்கு பதில்
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என பேசியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மூர்த்தி.. அதற்கு சரியான பதிலை நாடாளுமன்ற உறுப்பினர்களும், யார் நாகரீகமானவர்கள் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார் என்றார்.
சூசகமாக பதிலடி தந்தார்
மேலும் மதுரை மேற்கு சட்ட மன்றத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்றும் மூர்த்தி அல்ல மும்மூர்த்தி வந்தாலும் வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு குறித்து பதில் அளித்து அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு தொகுதி யார் கோட்டை என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என சூசகமாக பதிலடி தந்தார்.