தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த அருவிக்கு நீர் வரத்தானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள வெள்ளகெவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையினால் கும்பக்கரை அருவிக்கு நீர் வருகின்றது.

Continues below advertisement

Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!

Continues below advertisement

இந்த நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் நிலையில் முற்றிலும் குறைந்த அளவில் வரும் நீரில் ஒவ்வொரு நபராக குளித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைவதோடு  கோடை வெயிலின் தாக்கத்தை தனித்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய கலெக்டர் - தி.மலையில் நெகிழ்ச்சி

Lok sabha election second Phase LIVE: குடும்பத்துடன் சென்று வாக்களித்த பினராயி விஜயன்

மேலும் குறைந்த அளவில் கொட்டி வரும் நீரில் ஆண்கள் அதிக அளவில் நின்று கொண்டு பல மணி நேரமாக குளிக்கும் நிலையால் பெண்கள் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கும்பக்கரை அருவியில் துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ள குறைந்த அளவு நீரில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் மழை பெய்து அருவியில் நீர் வரத்து அதிகரித்து வரும் வரை கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள்  செல்வதை தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் துர்நாற்றம் வீசும் அருவி நீரில் குளிப்பது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி  டேவிட்ராஜிடம் கேட்டபோது, நீர் துர்நாற்றம் வீசுகின்றதா என பார்வையிட்டு சுற்றுலா பயணிகள்  குளிக்க அனுமதிப்பதா என்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.