நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து, இன்று 26ஆம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அதில், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்கியது.
Lok sabha election second Phase LIVE: குடும்பத்துடன் சென்று வாக்களித்த பினராயி விஜயன்
கேரளாவை பொறுத்தவரை 20-நாடாளுமன்ற தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 194 வேட்பார்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 2,77,49,159 வாக்களர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக 1,43,33,499 பெண் வாக்காளர்கள் உள்ளதாகவும், 2,64,232 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இருப்பதாகவும், 367 மூன்றாம் பாலினத்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் முதன்முதலில் வாக்களிக்கும் இளம் வாக்களர்களாக 5,34,394 இந்தமுறை வாக்களிக்கின்றனர் .இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு 13,272 இடங்களில் 25,231 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் 66,303 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிகளில் 1- லட்சத்திற்க்கும் மேற்பட்ட காவல் மற்றும் துணை இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாடி மையங்களும் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை 7-மணி முதல் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வாமாக வாக்களித்து வருகின்றனர்.
முதியோர், மாற்றுத்திறாளிகள், கர்ப்பிணிகள் போன்றோர் எவ்வித சிரமங்கள் இன்றி வாக்களிக்க பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவை பொறுத்தமட்டில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு ஏற்கனவே தேர்தல் அதிகாரிகளால் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்குள்ள பழங்குடியின மக்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதற்கிடையே பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வயநாடு உட்பட சில மாவட்டங்களில் தேர்தலை புறக்கணிக்க நக்ஸ்லைட்கள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து அத்தகைய இடங்களில் எல்லாம் 144 தடை உத்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு துணை இராணுவ படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் காலை 7 முதல் மாலை 6 மணிவரை வாக்களிக்கப்பதற்கான அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.