Lok Sabha Election Second Phase LIVE : ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதிக்கு வாக்குப்பதிவு நிறைவு.. அதிகபட்ச வாக்குப்பதிவு எங்கு?
Lok sabha election second Phase: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, திரிபுராவில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 53.34 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி பிரிஜ் பூசண் மீதான வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத உணர்வுகளை தூண்டும் விதமாக வாக்குகளை கேட்டதாக தெற்கு பெங்களூரு எம்பியும் பாஜக வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கேரளாவில் மதியம் மூன்று மணி நிலவரப்படி 52 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் கர்நாடகாவில் 3 மணி நிலவரப்படி, 51 சதவீத வாக்குப்பதிவும், மணிப்பூர் மற்றும் திரிபுராவில் 68 சதவீத வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
1 மணி நிலவரப்படி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக திரிபுராவில் 54.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. மணிப்பூரில் 54.26 சதவிகித வாக்குகளும் சத்தீஸ்கரில் 53.09 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.
கேரளாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் 16 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. பகுதி வாரியாக பார்க்கும்போது ஆலப்புழா மற்றும் பாலக்காட்டில் அதிகப்பட்சமாக 20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளாவில் 9 மணி நிலவரப்படி 12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
கர்நாடகாவைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Lok Sabha Election Second Phase LIVE : கேரளாவின் 20 தொகுதிகளில் தேர்தல்.. நடிகரும், பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி திருச்சூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் உள்ள அவரது தொகுதியில் வாக்களித்தார்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம் என்பதால் வாக்காளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் ஆர்வமுடன் வாக்களிக்க குவிந்து வருகின்றனர்.
நாட்டில் அதிக மக்களவைத் தொகுதி கொண்ட உத்தரபிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Background
மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ஜம்மு – காஷ்மீரில் வாக்குப்பதிவு நடக்கிறது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகா 14 தொகுதிகளிலும், கேரளாவில் 20 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதற்றம் அதிகம் நிறைந்த மாநிலங்களான சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சி.பி.ஐ. சார்பில் ஆனி ராஜா மற்றும் கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகின்றனர்.
இதுபோல, பல தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுவதால் இந்த தேர்தல் சூடுபிடித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -