மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை நடைபெறுகிறது. இதற்காக தமிழக முழுக்க வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மலை நகரமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில்  வாகனங்கள் செல்ல முடியாத பல்வேறு கிராமங்கள் இருந்து வருகிறது. குறிப்பாக 400 வருடங்கள் பழமையாக உள்ள வெள்ளைகெவி, மஞ்சம்பட்டி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் இருந்து வருகிறது .


Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்




இந்த மலை கிராமங்களுக்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் இன்று கொடைக்கானல் வழியாக வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 400 ஆண்டுகள் பழமையாக உள்ள வெள்ளகெவி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்கு இயந்திரங்கள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. குதிரைகளில் வாக்கு இயந்திரங்கள் மற்றும் நாளை தேர்தலுக்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்துமே குதிரைகள் மூலம் கட்டி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடனும் துப்பாக்கி ஏந்தி காட்டு வழியாக இந்த வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லப்பட்டது .


CM MK Stalin: "வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரை!




மேலும் நாளை தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள் . சவாலாக இருக்கக்கூடிய இந்த பணியில் பல்வேறு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அலங்காநல்லூர் செல்லும் சாலையில் உள்ள மலையடிவாரப்பகுதியான எல்லைப்பாறையிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் லிங்கவாடி ஊராட்சியை சேர்ந்த மலைக்கிராமமான  லிங்கவாடி. மலையூர்  உள்ளது.


Actor Kishore: ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!




இங்கு ஆண் 237 வாக்காளர்கள் பேர்,249 பெண் வாக்காளர்கள்  பேர் மொத்தம் 486பேர் உள்ளனர். இவர்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு பெட்டி, எழுது பொருட்கள் போன்றவற்றை மண்டல அலுவலர் கணேஷ் தலைமையில்  வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும்காவல்துறையினர் பாதுகாப்புடன் அடிவார பகுதியிலிருந்து குதிரையில் பொருட்களை ஏற்றி வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்தே எடுத்து சென்று சேர்ந்தனர்.