தேனி: மலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி செய்து தராததால் வாக்குப்பதிவு இயந்தித்தை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தினர்.




தேனி மாவட்டம் போடி தலுக்காவிற்கு உட்பட்ட பகுதி அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு இதுவரையில் சாலை வசதி இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும்  இதுவரையில் சாலை வசதி செய்து தரவில்லை எனக் கூறி ஊரடி ஊத்துக்காடு உள்ளிட்ட 10 மலை கிராம மக்கள்  50க்கும் மேற்பட்டோர் சோத்துப்பாறை அணை அருகே மலை கிராமத்திற்கு செல்லும்  பாதையில் அமர்ந்து தேர்தலை புறக்கணிக்க போவதாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Income Tax Alert: மக்களே உஷார்..! உங்களது இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கபப்டும்..!




மேலும் , மலை கிராமத்திற்கு செல்லும் வாக்குச்சாவடி இயந்திரம் மற்றும் வாக்குச்சாவடி பணிக்குச் செல்லும் ஊழியர்களையும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி வாக்குச்சாவடி இயந்திரங்கள் வருவதற்கு முன்பாகவே போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபடும் மலை கிராம மக்கள் கூறுகையில், 10 தலைமுறைகளுக்கு மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதுவரையில் சாலை மலை கிராம மக்களின் கல்வி வாழ்வாதாரம், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில் மலை கிராம மக்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், 


Latest TN Poll Trend: தமிழகத்தில் திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட கள நிலவரம்.. எந்தெந்த தொகுதிகளில் வெற்றி யாருக்கு?


Dubai Flood Exclusive: வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் பாலைவன பூமி: துபாயிலிருந்து ஏபிபி நாடுக்கு பிரத்யேக தகவல்


ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் ஜெயித்து வந்தால் உங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவேன் எனக் கூறி  வாக்குகளைப் பெற்ற பின்பு மலை கிராம மக்களை ஏமாற்றி விடுவதாக கூறிய நிலையில், உரிய உத்திரவாதம் கொடுக்கவில்லை என்றால் இந்த முறை வாக்கு சாவடி இயந்திரங்களை அனுமதிக்க மாட்டோம், தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி   போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.