மலைகளின் இளவரசியான என அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. தற்போது குளிர் கால சூழல் நிலவி வருவதால் அதை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிவார்கள்.


Officers Promotion and Transfer : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அதிரடி..




அதன்படி, புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வாகனங்களில் வரத்தொடங்கினர். சிலர் மலைப்பாதை பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு சக்கர வாகனங்களிலும் கொடைக்கானலுக்கு  வந்தனர்.


இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல அதிக அளவில் வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க ஏரிச்சாலையில் வாகன போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.


Special Buses : தொடர் விடுமுறை...வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள்... முழு விவரம்..


பகலில் கொடைக்கானலின் குளிர்ந்த காலநிலையை அனுபவித்தபடியே நகரில் உள்ள பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, குணா குகை, பில்லர் ராக்ஸ், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரில் உள்ள ஓட்டல்கள், சாலையோர கடைகளில் அமர்ந்து சாப்பிட முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது.


Chennai Book Fair : 6-ஆம் தேதி தொடங்கும் 46-வது புத்தகக் கண்காட்சி; ஆனால், இந்தமுறை இந்த அரங்கம் தனி ஸ்பெஷல்!


மேலும் புத்தாண்டையொட்டி நகரில் உள்ள உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்துகொள்வதற்காக சுற்றுலா பயணிகள் மாலையில் இருந்தே உணவகங்களை நோக்கி படையெடுத்து வந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு பிரார்த்தனைக்காக ஏராளமானோர் குவிந்தனர்.




பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தும், கேக் வெட்டியும் புது வருட பிறப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் இரவு 7 மணி முதலே ஏரிச்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் நள்ளிரவில் வாகன சாகசத்தில் ஈடுபடுவதற்காக ஏரிச்சாலைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண