தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஓபனிங் சாங் (அறிமுகப் பாடல்கள்) மிக முக்கியமான அம்சமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ட்ரெண்டை உருவாக்கியவர் ‘சூப்பர் ஸ்டார், ‘தலைவர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ரஜினி காந்த்தான். இவரை பின்பற்றிய இன்றைய நட்சத்திரங்களான விஜய், அஜித், சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட பலரும் தங்களது படங்களில் ஓபனிங் சாங் கேட்டு வாங்கி கொள்கின்றனர். 


90 கால கட்டத்தில் ரஜினின் ஸ்டைலில், எஸ்பிபி பின்னணி குரலில் படத்தில் இடம்பெறும் ஓபனிங் சாங் அனைத்தும் அதிரிபுதிரி ஹிட். இன்றளவும் இந்த பாடல்களை வைஃப் செய்யாத 90’ஸ் கிட்ஸ்களும் இல்லை, 2கே கிட்ஸ்களும் இல்லை. அப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்தநாளான இன்று அவரது படத்தில் இடம்பெற்ற டாப் 5 ஓபனிங் சாங் லிஸ்ட்களை இங்கே பார்க்கலாம். 


1.'பாஷா' படத்தில் ’நா ஆட்டோகாரன்’:



இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பாஷா திரைப்படம் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு தேவா இசையமைத்து அசத்தி இருப்பார்.  மேலும் ரஜினியின் பெயருக்கான தீம் பாடலை முதன்முதலில் வைத்த படம் இது. அன்றுமுதல் இன்றுவரை ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் தேவா இசையமைத்த தீம் மியூசிக்குடன் நடிகரின் பெயரில் டைட்டில் கார்டு போடப்படும். இந்தப் படத்தில் ரஜினி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார், மேலும் 'நா ஆட்டோக்காரன்' பாடல் தமிழகம் முழுவதும் உள்ள நடிகருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியது.


இன்றுவரை ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டிலும் ஆயுத பூஜைக்கு இந்த பாடல் ஒலிக்காத இடமே இருக்காது. 


2.’படையப்பா’வில் 'என் பேரு படையப்பா': 



இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெள்ளி விழா கொண்டாடிய படையப்பா திரைப்படம் கடந்த1999ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கலக்கி இருப்பார். படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பாம்பை முத்தமிட்டதற்குப் பிறகு 'என் பேரு படையப்பா' என்ற அறிமுகப் பாடல் வரும். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்தப் பாடல், ரஜினிகாந்தை சிங்கம் போல் பவர்ஃபுல்லாக காட்டியிருக்கும். “பின்னால் நூறு படையப்பா” என்ற வரி அந்த நடிகருக்கு இருந்த ரசிகர்களைக் குறித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க செய்தது. 


3.'அருணாச்சலம்' படத்தில் 'அதான்டா இதான்டா':



இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அருணாச்சலம்.  இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைக்க, 'அதான்டா இதான்டா' பாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுத, இந்த பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடி இருப்பார். இந்த பாடலில் “நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லை ஆனா தப்பு செஞ்சா ஆள விடுவதில்லடா” என்ற வரி இன்றளவு அவரது ரசிகர்கள் மனதில் வலம் வந்து கொண்டிருக்கும். 


4.'முத்து' படத்தில் 'ஒருவன் ஒருவன் முதலாளி':



கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த முத்து திரைப்படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இந்ய்ஜபாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தில் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் ரஜினிகாந்த்தின் அறிமுகப் பாடலாகும், இந்தப் பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். "மண்ணின் மீது மனிதனுகாசை மனிதன் மீது மண்ணுக்காசை" போன்ற வலுவான வரிகளை இப்பாடல் வலுவான கருத்துகளை பதித்திருக்கும். 


5.’அண்ணாமலை’ படத்தில் ’வந்தேன்டா பால்காரன்’:



1992ல் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.  சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் ஏழை பால் வியாபாரி அண்ணாமலை மற்றும் பணக்கார ஹோட்டல் வியாபாரி அசோக், இருவருக்கும் இடையே ஏற்படும், நட்பு மற்றும் வியாபார மோதலே இந்த படத்தின் கதைக்கரு. வந்தேந்த பால்காரனின் பாடல் வரிகள் கன்னட கவிதையால் ஈர்க்கப்பட்டவை. 90களில் தேவா இசையமைத்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.