திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளங்கி, கோம்பை காடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு நேற்று மன்னார்குடியை சேர்ந்த 5 நபர்கள்  நான்கு சக்கர வாகனத்தில் 3 பேரும், இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேரும் சுற்றுலா வந்துள்ளனர்.

Continues below advertisement

அப்போது நேற்று இரவு பரவலாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கோம்பைக்காடு பகுதியில் உள்ள இறக்கமான சாலையில் வந்துகொண்டு இருக்கும்போது நான்கு சக்கர வாகனத்தில் ப்ரேக் பிடிக்காத காரணத்தினால், வாகனத்தின் முன்பாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

Continues below advertisement

TN Rain News LIVE: முன்கள வீரனாகத் துணை நிற்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த விஜய் தலைகவசம் அணிந்து இருந்ததால் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த  ராகேஷ் 27 என்பவர் தலைகவசம் அணியாத நிலையில் சாலையின் ஓரத்தில் இருந்த பாறை மீது மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை ராகேஷ் உடலை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த விஜய்க்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பள்ளங்கி கிராமத்திற்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்