100 அடி ஆழம் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் போட்டோ எடுத்த இளைஞர் தவறி விழுந்து ஏழு நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினரின் தேடுதல் வேட்டையில் தற்போது அவரது உடல் நீர்வீழ்ச்சியிலிருந்து மீட்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மணலூர் ஊராட்சியில் உள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழை நீரானது குடகனாறு, காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. இந்நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து நீர்வீழ்ச்சியை கண்டு ரசிப்பதும், குளிப்பதும் வழக்கம்.
அதேபோல் விடுமுறை நாட்களிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் தனது நண்பருடன் நீர்வீழ்ச்சியில் நின்று போட்டோ எடுத்த போது கால் தவறி கீழே விழுந்தார். 100 அடி ஆழம் கொண்ட நீர்வீழ்ச்சியில் விழுந்தவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு கடந்த ஏழு நாட்களாக சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஆகியோர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்றைய தேடுதல் பணியின் போது அயஜ் பண்டியனின் உடல் பாறை இடுக்கில் சிக்கி இருந்ததை கண்டுபிடித்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.
19(1)(a) Movie Review: மலையாளத்தில் ஜெயித்தாரா விஜய் சேதுபதி? மனங்களை வென்றாரா நித்யா மேனன்?
மேலும் நீர்வீழ்ச்சியின் அருகில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை, காவல்துறை சார்பில் எச்சரிக்கை பதாகைகள் இல்லலாமலும், பாதுகாப்பு வளையங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் குளிக்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த நீர்வீழ்ச்சியில் ஏற்கனவே பத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தாக கூறப்படும் நிலையில் அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நீர்வீழ்ச்சியில் உரிய பாதுகாப்பு வளையங்கள் அமைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து குளித்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்