சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் குகேஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். நிகால் சரினும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 


செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டித் தொடரின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய வீரர்கள் குழு பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர். இருப்பினும் தனிநபர் பிரிவில் இந்தியாவிற்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குகேஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் மட்டுமின்றி இந்தியாவிற்காக சிறப்பாக ஆடி வந்த இந்தியாவின் நிகால் சரினும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.


ALSO READ | Chess Olympiad Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஒலித்த செம்மொழியான தமிழ் மொழி பாடல்




இந்தியாவின் மற்றொரு வீரரான எரிகாசி வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் மட்டுமின்றி, இந்தியாவின் மற்றொரு வீரரும், செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது முதல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் பிரபல வீரருமான பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்று அசத்தியுள்ளார்.






இவர்கள் மட்டுமின்றி இந்திய செஸ் வீராங்கனைகளான ஹரிகா, ஹம்பி, வைஷாலி, தானியா, பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.





ஓபன் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பி அணி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினர். இந்திய பி அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன், நிகால் சரின் மற்றும் ரவுனக் சத்வானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. தல தோனி பங்கேற்கவில்லையா? என்னென்ன சிறப்பம்சங்கள் ?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண