கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் வனவிலங்குகள் தொந்தரவு செய்து வருவதாக கூறி  வனத்துறை அலுவலகத்தில் ஊர்மக்கள் தரையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Virat Kohli: தனிப்பட்ட காரணம்.. இங்கிலாந்து தொடரில் இருந்து முழுமையாக விலகிய விராட் கோலி - இந்திய அணி அறிவிப்பு!




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு பீன்ஸ், கேரட், அவரை, முட்டைக்கோஸ், வெள்ளை பூண்டு என பல்வேறு காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் மேல் மலை கிராமங்களான  கிளாவரை, மன்னவனூர், பூம்பாறை, குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் தற்போது பன்றி, மயில், குரங்குகள், கரடி உள்ளிட்ட விலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக, கடந்த வாரம் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .


Box office Collections: மாஸ் காட்டியது லால் சலாமா? லவ்வரா? - முதல் நாள் வசூல் நிலவரம் இதோ!




இதனைத் தொடர்ந்து  கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . பேச்சுவார்த்தைக்கு மாவட்ட வன அலுவலர் வராததை கண்டித்து கலந்து கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் வனத்துறை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Actress Santhoshi: இலங்கையில் சாப்பாட்டால் அசிங்கப்பட்ட சீரியல் நடிகை - செம அப்செட்டில் இந்தியா ரிட்டர்ன்




மேலும் வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் போது வனத்துறை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உரிய நிவாரணமும் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் பேச்சுவார்த்தைக்கு வந்த போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது . மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் விவசாயிகள் கலந்து சென்றனர். மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .