மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் பேரிஜம் ஏரி, தொப்பிதூக்கிப்பாறை, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர்ராக் ஆகியவை முக்கிய சுற்றுலா இடங்களாகும்.


இந்நிலையில், பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த யானைகள் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோயர் பாயிண்ட் பகுதியில் புகுந்து 13 கடைகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. மேலும் 2 தினங்களாக அப்பகுதியிலேயே யானைகள் முகாமிட்டு இருந்தன. இதனையடுத்து சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.


Diwali Crackers: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு...உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி...ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க..!



இதற்கிடையே மாவட்ட வனஅலுவலர் யோகேஷ் குமார் மீனா, வனச்சரகர்கள் செந்தில், சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் இரவு, பகலாக யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் பேரிஜம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இதனை நேற்று பகலில் வனத்துறையினர் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


The Road Trailer: உண்மை கதையில் ஸ்கோர் செய்யப்போகும் த்ரிஷா.. ட்ரெண்டிங்கில் “தி ரோடு” பட ட்ரெய்லர்..!



இதுகுறித்து வனச்சரகர் செந்தில் கூறுகையில், "யானைகள் பேரிஜம் பகுதிக்கு இடம் பெயர்ந்து உள்ளதால் 12 மைல் சுற்றளவு உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர்ராக் ஆகிய சுற்றுலா இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும். அங்கு யானைகள் நடமாட்டம் குறைந்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்"என்றனர்.


Lollu Sabha Jeeva: இஷ்டத்துக்கு அடித்துவிட்ட லொள்ளு சபா ஜீவா.. மாமிசம் சாப்பிட்டா இப்படியெல்லாம் நடக்குமா? அறிவியல் சொல்வது என்ன?