திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும். பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை புரிகிறார்கள். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு... தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை..!


குறிப்பாக கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய போதை காளான் என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் இயற்கையாக வளர்ந்து வருகிறது. பல வகையான காளான்கள் கொடைக்கானலில் இருக்கிறது . கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கு மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் போதை காளானும் ஒரு வகையாகும் போதை காளான் மட்டுமல்லாது உணவுக்காக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷ தன்மை உடைய காளான்களும் இதேபோன்று இயற்கையாகவே கிடைக்கிறது.


Pele : கால்பந்தின் ராஜாதி ராஜா.. கால்பந்து பேரரசர்... பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!




போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் காவல்துறையினர் பல வழக்குகள் பதிந்தும் இதுவரை போதைக்காளான் கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை.. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில் போதை காளான் பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில்  வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் பல வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.


Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!


Driver Jamuna Review: ட்ரைவர் ஜமுனா த்ரில் ரேஸில் ஜெயித்ததா? விறுவிறு விமர்சனம் இங்கே..


அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்... மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பல இளைஞர்களால் கவரவும் படுகிறது . இதற்கு சமூக வலைதள பக்கங்களும் உதவியாக இருக்கிறது.  இதனை சைபர் கிரைம் போலீசார் முழுவதுமாக கண்காணிக்க வேண்டும் போதை காளான் கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக அரசு துறைகள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை வலுத்துள்ளது..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண