திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற மலைகளின் இளவரசி என அழைக்கப்படும், கொடைக்கானலில் வருடந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாகவும் மலர் கண்காட்சி நடத்தப்படும்.


ஜெ.வுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு; மத நம்பிக்கை இல்லை: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சசிகலா




இந்த நிலையில், தற்போது கோடை விழா துவங்கி மலர் கண்காட்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அவர்களின் பார்வைக்காக 20அடி நீள மயில், 10 அடி உயரம் கொண்ட சேவல், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், நெருப்பு கோழி உள்ளிட்ட உருவங்களை பூக்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.


Weather Report Today : சென்னை, காஞ்சி, செங்கையில் மழை முன்னறிவிப்பு என்ன? என்ன சொல்லுது வானிலை?




ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதே போல் இன்று கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அரசுத்துறை சார்பாக படகு அலங்கார அணிவகுப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தோட்டக்கலைத்துறை சுற்றுலாத்துறை மீன்வளத்துறை ஆகிய நான்கு துறைகளில் இருந்து அந்தந்த துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் விதமாக படகுகள் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது.


Pat Cummins IPL Final: உலகக்கோப்பை பாணியில் ஐபிஎல் ஃபைனல் - கம்மின்ஸ் Vs நம்பர் ஒன் அணி, கோப்பை யாருக்கு?




இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 23 ஆவது வருட நாய் கண்காட்சி நடைபெற்றது. இந்த நாய் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாய்கள் பங்கேற்றன.  இதில் குறிப்பாக கடந்த 21 ஆம் தேதி நட்சத்திர ஏரியில் படகு போட்டி நடைபெற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக படகு போட்டி மாற்றி அமைக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து இன்று நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் படகு போட்டியானது நடைபெற்றது. இந்த படகு போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹில்மா, போதி சித்தார்த், இரட்டையர் ஆண்கள் பிரிவில் ஶ்ரீதர், வசந்தன், பெண்கள் பிரிவில் நிவேதிதா, கவியா ஆதித்யா ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோட்டாசியர் சிவராமன், சுற்றுலா அலுவலர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.