திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பர்புரம் பகுதியில் தோட்டக்கலை துறை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது,இந்த ஆராய்ச்சி நிலையத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விவசாயம் செய்வதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கொடைக்கானல் மலை பகுதிகளில் நிலவும் இதமான சீதோஷண சூழ்நிலைக்கு ஏற்றவாறு  பழ வகைகள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.




இந்நிலையில் தோட்டக்கலை துறை ஆராய்ச்சி நிலையதில் சுமார் 5 சென்ட் பரப்பளவில் பாலிதீன் கூடாரங்கள் அமைத்து மகாராஷ்டிராவில் இருந்து செர்யெர்ட்டா, விமரானா, கட்ரைன் ஸ்விட்,ஃபெர்ன், ஃபெஸ்புவல் உள்ளிட்ட  16 வகையான  ஸ்ட்ராபெரி நாற்று வகைகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது ஸ்ட்ராபெரி பழங்கள் விளைய துவங்கியுள்ளன.




இதில் அதிகமான மகசூல், சுவை, பழங்களின் அளவு, நோய் பூச்சிக்கு எதிர்ப்பு தன்மை வாய்ந்த ஸ்ட்ராபெரி பழங்களை தேர்வு செய்து மலைகிராம விவசாயிகளுக்கு நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில்  வழங்க உள்ளதாகவும் தோட்டக்கலை துறை ஆராய்ச்சி உதவி பேராசிரியர் தெரிவித்தார். மேலும் ஸ்ட்ராபெரி நாற்றுகள் நடவு செய்யப்பட்டு 6 மாதங்களில் ஸ்ட்ராபெரி பழங்கள் விளைய துவங்கும்,




இதனை தொடர்ந்து உயிர் தொழில் நுட்பத்துத்தடன் பராமரித்தால் 3 வருடங்கள் வரை ஸ்ட்ராபெரி பழங்கள் விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கிறார், மேலும் ஒரு விவசாயி ரூபாய் 40,000 முதலீடு செய்து ஸ்ட்ராபெரி விவசாயத்தில் ஈடுபட்டால் 1 லட்சம் ரூபாய் முதல் 1,20,000 வரை லாபம் ஈட்டலாம் எனவும், மேலும் இந்த ஸ்ட்ராபெரி பழங்களில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் தோட்டக்கலை ஆராய்ச்சி துறையினரால் கூறப்படுகிறது. கொடைக்கானல் மலை பகுதிகளில் நிலவும் இதமான கால நிலைக்கு ஸ்ட்ராபெரி பழங்கள் விளைச்சல் தற்போது அதிகமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


 


தேனி : காசிக்கு நிகரான பெரியகோவில், பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..


 


 


செம்ம ஸ்ட்ரெஸ்சா இருக்கு, கம்மி பட்ஜெட்ல ஒரு டூர் போகனும்னு இருந்தா, அதுக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பக்கத்துல இருக்க வைகை அணை பூங்கா நல்ல சாய்ஸ் !


 


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


 


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!