இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தில், சாமானிய மக்களின் சுற்றுலா தலமாக விளங்குகிறது, தேனிக்கும் ஆண்டிபட்டிக்கும் இடையில் இருக்கும் வைகை அணை பூங்கா.



காமராஜர் காலத்தில் கட்டிய வைகை அணை தற்போதும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்தபோது அன்றைய தமிழக முதல்வர் காமராஜரின் முயற்சியால் வைகை நதி ஆற்றில் குறுக்கில் அணைகட்ட திட்டம் தீட்டப்பட்டு ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றின் குறுக்கே 1959-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அணைதான் வைகை அணை மற்றும் பூங்கா



தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் வரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது வைகை அணை பூங்கா, வசதியானவங்க  சுற்றுலா போகனும்னு நினைச்சா  ஊட்டி, கொடைக்கானல்னு  பல இடங்களுக்கு போவாங்க.  ஆனால் பட்ஜெட் பிரச்னை இருக்கவங்க பட்ஜெட் பொருத்துதான் ப்ளான் பன்னுவாங்க. அப்படி குறிப்பா தேனி மாவட்டத்துக்குல்ல இருக்கவங்க சின்ன பட்ஜெட்ல ஒரு டூர் போகணும்னா இந்த வைகை அணை பூங்காவதான் தேர்ந்தெடுக்குறாங்க. இயற்கையை அனுபவிக்கவும், மனதைக் குளிர்ச்சியாக்கவும் ஒரு அழகிய இடமாக இருந்து வருகிறது,  இந்த அணையின் பிரமாண்டத்தை அழகான சூழலில் அமர்ந்து ரசிப்பதற்காக அணையின் இரண்டு பக்கமும்  பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கு.



ஆரம்பத்தில் மதுரை, தேனி மாவட்ட மக்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டுச் சென்ற வைகை அணை, தற்போது வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டது. ப்ளாக் அண்ட் ஒய்ட் படங்கள் முதல் எம்.ஜி.ஆரிலிருந்து சிவாஜி வரையில் என தற்போதும் உள்ள ஹீரோக்கள் சினிமா பாடல்களின் டூயட் காட்சிகள் இடம்பெறுவது இந்த வைகை அணை பூங்காவில்தான்.




பசுமையான சூழலில் அமைந்திருக்கும் பூங்காவில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பொம்மைகள், ஊஞ்சல் என பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்களும் உள்ளன. பூங்காவைச் சுற்றிவர சிறு ரயிலும் உண்டு. விளையாடுவதற்கு விரிந்த இட வசதியும் உள்ளது. வைகை அணையிலிருந்து வெளியேறும் நீர்  எந்தெந்த மாவட்டங்களுக்கு எப்படி செல்கிறது என்பதை இந்த பூங்காவில் ஒரு மாடலாகச் செய்து வைத்திருப்பது அனைவரையும் கவர்ந்து வருகிறது . மிருகங்கள், மனிதர்கள் எனப் பல சிலைகளை வடிவமைத்து வைத்திருப்பது  குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது.


பட்ஜெட்ல ஒரு டூர் போக செம்ம ப்ளேஸ் !  சின்ன பட்ஜெட் செம்ம என்ஜாய்மெண்ட்! ”சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்  போல வருமா”இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை; இந்த ஊருக்கும் சொந்தமானவர். இசைஞானி இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம்தான் இது. 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!