மலையாளம் பேசும் மக்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஓணம் ஆகும். வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி மன்னனை அழித்ததும், அந்த மகாபலி மன்னன் வருடத்திற்கு ஒருநாள் அதாவது ஆவணி திருவோண தினத்தில் தனது மக்களை பார்க்க வருவதுமே ஓணம் பண்டிகை ஆகும்.
AR Rahman: இசை புயல் இயக்கிய முதல் படம்... சர்வதேச சினிமாவில் புதிய மைல்கல் பதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!
ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட சில நாட்களே உள்ளது. இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவிருந்தது.
மேலும் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் தென்னிந்திய மாநிலமான கேரளா, பலருக்கும் பிடித்த சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. அந்த ஊரின் சினிமாவை தாண்டி அங்குள்ள இடங்களுக்கும் மக்கள் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில், வயநாடு மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.
சந்தோஷமா, கெத்தா... கொடி அறிமுக விழாவில் ட்விஸ்ட் வைத்த தவெக தலைவர் விஜய்
தென்மேற்கு பருவ காலம் தொடங்கிய நிலையில், மழை கொட்டித்தீர்த்தது. இதனால் எதிர்பாராத விதமாக வயநாடு எனும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரும் அளவில் பாதித்துள்ளது. 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் பல மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மும்மரமாக நடந்து வர, சினிமா பிரபலங்கள் பலர் கேரள அரசுக்கு நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
MK Stalin On Cabinet Reshuffle : “அமைச்சரவையில் மாற்றமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்..!
இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு பேரழிவால் ஓணம் வார கொண்டாட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.