சந்தோஷமா, கெத்தா... கொடி அறிமுக விழாவில் ட்விஸ்ட் வைத்த தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.

Continues below advertisement

பனையூர் அலுவலகத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். சிவப்பு, மஞ்சள் பின்னணியில் இரண்டு போர் யானைகள் கொண்டும் நடுவில் வாகைமலர் கொண்ட லோகோவை கொண்டுள்ளது. 

Continues below advertisement

பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடியை கம்பத்தில் ஏற்றி வைத்தார் விஜய். பின்னர் த.வெ.க. கொடி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடல் தமிழன் கொடி பறக்குது என்று தொடங்குகிறது. 

இதைத்தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய் “இன்று நாம் எல்லாருக்கும் சந்தோஷமான நாள். நீங்கள் ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க. என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாடியும் சரி, தமிழக மக்கள் முன்னாடியும் சரி கொடியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. 

இந்த கொடிக்கான விளக்கத்தை கண்டிப்பாக சொல்வேன். புயலுக்கு பின் அமைதி என்பது போல, இந்த கொடிக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. அதுவரைக்கும் சந்தோஷமா கெத்தா கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன். இதுவரைக்கும் நமக்காக உளைத்தோம். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டுக்காகவும் உழைப்போம். இது உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நான் சொல்லாமலே கொண்டாடுவீங்கன்னு எனக்கு தெரியும். அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம். நம்பிக்கையுடன் இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola