கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த  விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.




இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.


போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!


தற்போது தென் மேற்கு பருவ மழை ஆரம்பமாகி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக பருவ மழையின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக ஏற்றுமதி வர்த்தகம் குறைவாலும்  சென்ற மாதம் வரை ஏலக்காய் வர்த்தகம் குறைந்திருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அதிகளவில் மழை பெய்ய துவங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஏலக்காய் விவசாயத்தில் பரமரிப்பு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.


Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்




"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!


மேலும் தொடர் மழையால் ஏலக்காய்கள் கொள்முதல் செய்வதில் கடுமையான சிக்கலும் ஏற்பட்டது. இதனால் சென்ற மாதம் வரை ஏலக்காய் வர்த்தகம் குறைந்திருந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழையும் ஆரம்பித்த சில நாட்களிலேயே கொட்டி தீர்த்த மழையின் எதிரொலியால் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தற்போது ஒரு கிலோ ஏலக்காய்  1600 ருபாய் என ஏலம்போனது. கேரளாவில் தொடர் மழையால் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் ஏலக்காய் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.