கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வில் தானிய கொள்கலன் மற்றும் மேற்கூரை
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியினைச் செய்து வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தியது. கி.மு 6-ஆம் நூற்றாண்டளவில் எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியது. இதனை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிறுவியது. இதனை நூலாக வெளியிட்டு உலகறியச் செய்தது. நகர நாகரிகம் என்பதற்குப் பல்வேறுக் கூறுகள் உண்டு. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர்மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள், போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்று சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் இரண்டு தானியக் கொள்கலன்கள், ஓடுகளால் நெய்யப்பட்ட வீட்டின் மேற்கூரை உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக சுடுமண் மண்பாண்டத்தால் இரண்டு தானிய கொள்கலன்கள்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கீழடியில் தொல்லியல் துறையினர் ஒரு குழியில் அகழாய்வு மேற்கொண்ட பொழுது 3 - இரண்டு அடி ஆழத்தில் நாம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக சுடுமண் மண்பாண்டத்தால் இரண்டு தானிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தானியக் கொள்கலனில் நம் முன்னோர்கள் வீட்டில் தங்களது தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தி இருக்கலாம்.
சுடுமண் ஓடுகளால் நெய்யப்பட்ட வீட்டின் மேற்கூறையும் கிடைத்துள்ளது.
அதன் அருகையே மற்றொரு குழியில் அதன் தொடர்ச்சியாக இரண்டடி ஆழத்தில் நம் முன்னோர்கள் வீடு கட்டி வாழ்ந்ததற்கு அடையாளமாக சுடுமண் ஓடுகளால் நெய்யப்பட்ட வீட்டின் மேற்கூறையும் கிடைத்துள்ளது. இதன் மூலம் நாம் முன்னோர்கள் நகர நாகரீகத்தோடு மிகச் செழிப்பாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டும் விதமாக இன்னொரு ஆதாரமும் கிடைத்துள்ளது. என்று, தொல்லியல் துறை தெரிவித்தனர். தொடர்ந்து கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் பண்பாட்டினையும் தொன்மையையும் உலகறியச் செய்ய தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் பணி அரசின் வழிகாட்டுதலுடன் தொடரும்” என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மேலும் இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”முதல்வரை சுற்றி இருக்கும் அமைச்சர்களுக்கு சமூக நீதி பற்றி தெரியுமா..?” விளாசிய அன்புமணி..!