கீழடி : ஒரே சமதள குழியில் 7 எலும்புக்கூடுகள்.. கொந்தகையில் ஆச்சரியம் !
கீழடி அகழாய்வு தொடர்ச்சியான கொந்தகை ஆய்வில் ஒரே சமதள குழியில் 7 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement

கொந்தகை_7-ம்_கட்ட_அகழாய்வு
மதுரை மாவட்டத்திற்கு அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தமிழ்நாடு தொல்லியல்துறை துவங்கியது. இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் துவங்கியது.

இந்நிலையில், கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கதிரேசன் - சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழைமையான ஈமக்காட்டில் முதுமக்கள் தாழியில் எலும்புகள் கிடைத்தன. 6-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது 75 செ.மீ அளவுள்ள குழந்தையின் முழு எலும்புக் கூடு கிடைத்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஒரு குழந்தையின் எலும்பு ஒன்று 95 செ.மீ அளவில் கிடைத்தது.

நேற்றைய கொரோனா அப்டேட்ஸ் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - TN Corona Update: மதுரையில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு
இப்படி தொடர்ந்து 6-ம் கட்ட அகழாய்வில் கொந்தகை, மணலூர், கீழடி, அகரம் ஆகிய நான்கு இடங்களிலும் முக்கிய பொருட்கள் கிடைத்தன. ஆனால் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி துவங்கி சில மாதங்களிலேயே முழு ஊரடங்கு போடப்பட்டது. இந்நிலையில் முழு ஊரடங்கு தளர்வுக்கு பின்பாக கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களிலும் தொல்லியல் ஆய்வு விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொந்தகை அகழாய்வில் ஒரே சமதள குழியில் 7 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில்...,” கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு, 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் கொந்தகையில் நடைபெறும் அகழாய்வு பழமையான ஈமக்காடு. பண்டைய தமிழர்கள் புதைக்கப்படும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து வைத்து புதைத்துள்ளனர். அதன் பொருட்களும் கிடைத்திருப்பது சான்று. ஒரே இடத்தில் வெவ்வேறு மாதிரிய பழக்கங்கள் இருந்ததையும் உணர முடிகிறது. எனினும் இங்கு கிடைக்கப்படும் எலும்புகளை பிரத்யேக ஆய்வுக் கூடங்களில் முழுமையான ஆய்வு செய்யும்போதுதான் பல்வேறு தகவல்கள் வெளிவரும்.
7-ம் கட்ட அகழாய்வுப் பணி முழு ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது விறு விறுப்பாக பணிகள் வேகமெடுக்கிறது. எனவே செப்டம்பர் மாதத்திற்கு பின்பும் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடர தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்” என ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -மீன்பிடி தடைகாலத்தில் படகுகளுக்கு முழு ஊரடங்கு; மீனவர்கள் கோரிக்கை !
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.