வேடசந்தூர் அருகே வாக்கு சேகரிப்பின் போது 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டை காண்பித்து பரிசு அறிவித்த கரூர் பா.ஜ.க வேட்பாளர்  செந்தில்நாதன் உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திண்டுக்கல் தேர்தல் பரப்புரை




TVK Vijay: ஈஸ்டர் தினத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் தழைக்கட்டும் - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து


நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை  மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத்திலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.




பா.ஜ.க. வேட்பாளர் பரப்புரை


தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் நின்று பொதுமக்களிடையே பேசிய திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ், கரூர் சிட்டிங் எம்.பி.யான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியின் புகைப்படத்தை காட்டி, இவர் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்தார்? உங்கள் குறைகளை எத்தனை முறை கேட்டறிந்தார்? எத்தனை குறைகளை நிறைவேற்றினார்?


CM Stalin: "எல்லா ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு சட்ட ஒழுங்கை பேசலாமா?" - முதல்வர் ஸ்டாலின்


50 ஆயிரம் ருபாய் நோட்டு கட்டுகளை காண்பித்து பரப்புரை


என்று கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வந்து எத்தனை பேர் கூறினாலும், அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக நமது வேட்பாளர் செந்தில்நாதன் அறிவிக்கிறார். அதற்காக கரூர் கட்சி அலுவலகத்தில் தனி கவுன்டர் போடப் போகிறோம். அங்கே வந்து நீங்கள் கூறினால் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டை ஆட்டிக்காண்பித்து பேசினார்.


இந்த சம்பவம் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி திவாகர் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கரூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன், திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ், தமிழர் தேசம் கட்சியின் மாநில அமைப்பாளர் மகுடீஸ்வரன், உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.