கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் , நெடுவிளையில் தங்கராஜ் என்பவருக்கு கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், "இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று சகிப்புத்தன்மை. இந்த சகிப்புத்தன்மை சொந்த சாதி மதத்தில் மட்டும் இல்லாமல் பிற மதங்களிலும் இருக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பல்வேறு கோணங்களில் விசாரித்து ஆலயம் கட்ட அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அந்த இடம் குடியிருப்பு பகுதிக்குள் இருப்பதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.அதே பகுதியில் கோயிலும் உள்ளது. மனுதாரர் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பெருமை வேற்றுமையில் ஒற்றுமைதான். ஒற்றுமையில் வேற்றுமை அல்ல. மனுதாரர் தன்னை சுற்றி வாழும் பல்வேறு மதம், சாதியை சேர்ந்தவர்களின் நம்பிக்கைகள், அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி ஆட்சியர் அல்லது பத்மநாபபுரம் சார்பு ஆட்சியர் ஆகியோர் ஆலயம் கட்ட அனுமதி பெற்றுள்ள தங்கராஜை அழைத்து, ஒலிபெருக்கி வைத்து பிரார்த்தனை நடத்தினால்தான் கடவுளுக்கு கேட்கும் என்பதில்லை. யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பிரார்த்தனை இருக்க வேண்டும் என ஆலயம் கட்டுபவரிடம் கூற வேண்டும். எனவே இந்த மனு முடித்துவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Urban Local Body Election: தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்யலாமே - பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
இலையமுதுகூடம் கழுமங்கல உடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் -பக்தர்கள் பங்கேற்பு!
Watch Video | விதவிதமான போஸ்.! இன்ஸ்டாவில் க்யூட் வீடியோவை ஷேர் செய்த ஷங்கர் மகள் அதிதி!