மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா இலையமுதுகூடம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பரிபூரண புஷ்க்கலாம்பாள் சமேத கழுமங்கல உடைய அய்யனார் கோயில்.  இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் காவல் தெய்வமாகவும், பலருக்கு குல தெய்வமாகவும் இந்தக் கோயில் விளங்கி வருகிறது. இந்நிலையில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்ய இவ்வூர் முக்கியஸ்தர்கள் முடிவெடுத்து பொதுமக்களின் பங்களிப்புடன் கோயிலின் திருப்பணிகள் செய்து முடித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


செல்லப்பார் அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!




கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன.


பின்னர் 8.30 மணிக்கு வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் ஓத பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் அகோரம் முன்னிலையில், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா உள்ளிட்ட கோயில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ள, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 


விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் - ஹெலிகாப்டரிலிருந்து தூவப்பட்ட பூக்கள்




தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் காண மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கொரோனா வைரஸ் தொற்று வழிகாட்டுதலை பின்பற்றி இலையமுதுகூடம் கிராம மக்கள் செய்திருந்தனர்.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி  காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இன்று முதல் நாற்பத்தி எட்டு தினங்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள முடியாத பக்தர்கள் இந்த மண்டல பூஜையில் கலந்துகொண்டால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கைகளில் ஒன்றாகும். இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண