இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ”திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றே பலர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் சொன்னதை செய்துள்ளார். மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். மானாமதுரை வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு உரிமைத்தொகை வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நிதிச்சுமை காரணமாக இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்று தொடக்கம்.. வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை எரித்தாரா கோவை மேயரின் தம்பி..? - நடந்தது என்ன?