ஜஸ்டின் பீபர் :

Continues below advertisement


உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட பாடகர் ஜஸ்டின் பீபர் . சமீபத்தில் இவர் amsay Hunt Syndrome  என்னும் முக பக்காவாத நோயால் பாதிக்கப்படிருந்தார். அதனால் அவர் ஏற்பாடு செய்திருந்த "பேபி" மற்றும் "லெட் மீ லவ் யூ" நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாமல் போனது. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால் விமர்சனங்களை சந்திக்க வேண்டியாதக இருக்கும் என்பதால் தனக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை குறித்து வீடியோவை வெளியிட்டிருந்தார் ஜஸ்டின் .






இந்தியா வருகிறார் ஜஸ்டின் :


உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது Justice World Tour' என்னும் நிகழ்ச்சியை மீண்டும் துவங்க இருப்பதாக ஜஸ்டின் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மீண்டும் இந்தியாவில் தனது நிகழ்ச்சியை நடத்த ஜஸ்டின் பீபர் திட்டமிட்டுள்ளார். வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி புது டெல்லியில் உள்ள  ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் (ஜேஎல்என் ஸ்டேடியம்) ஜஸ்டின் பீபரின் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .நிகழ்ச்சியில் டிக்கெட் விலை 4,000 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. BookMyShow மூலம் முன்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது . இது குறித்த அறிவிப்பு புக் மை ஷோ அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஜஸ்டின் இந்தியா வருவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக ஜஸ்டின் ஜூலை 31 அன்று இத்தாலியின் லுக்கா கோடை விழாவில் தனது ’Justice World Tour’ ஐ துவங்குவார் என கூறப்படுகிறது.






உலக சுற்றுப்பயணம் :


இந்தியா மற்றும் ஆசியா, தென் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து  ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகளுடன் தனது சர்வதேச உலக சுற்றுப்பயணத்தை அடுத்தடுத்து தொடரவுள்ளார் ஜஸ்டின் , 2023 ஆம் ஆண்டும் தொடக்கத்தில் ஐரோப்பாவை ஒரு வலம் வருவார் என்கின்றனர்.மே 2022 முதல் மார்ச் 2023 வரை 125 நிகழ்ச்சிகளுக்கு ஜஸ்டின் ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரையில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.