ராதிகா சரத்குமாருக்கு வரவேற்பு
நாடாளுமன்றத் தேர்தல் களம் கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் நான்கு முனைப் போட்டியால் தகிக்கிறது. தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி, பா.ஜ.க., கூட்டணி, நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடும் நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
பா.ஜ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் மதுரை விமான நிலையத்தில் வருகை தந்த பாஜக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருக்கும் மாலை
அணிவித்து குலவை இட்டவாறு ஆரத்தி எடுத்தனர்.
சரத்குமார்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக சரத்குமார், ராதிகாவை அறிமுகப்படுத்தி பேசினார். பாரதியார் ஜனதா கட்சியின் சொந்தங்களுக்கும் அதில் இணைந்த என் சொந்தங்களுக்கும் வணக்கம் விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்துதல் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ராதிகா
தொடர்ந்து ராதிகா பேசும் போது, விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்களுக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். விருதுநகர் எனக்கு புதிதல்ல. இருந்தாலும் இங்கு வேட்பாளராக மக்களுக்காக நல்லது செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் என் சொந்தங்களுக்கும் நன்றி.
விருதுநகர் தொகுதியில் வாய்ப்பு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு
நிச்சயமாக எங்களுக்கு நல்ல வாய்ப்பு . நல்ல சிறப்பாக செயல்படுவோம். நாங்க ஜெயித்து விடுவோம் என்று சொல்வது ரொம்ப ஈசி, வேலை செய்யணும் அதையும் பார்ப்போம்.
இதே தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் நீங்களும் களத்தில் இருக்கிறீர்கள் இது குறித்த கேள்விக்கு?
எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் போகப் போக பார்க்கலாம் என்றார். வெற்றி பெற்றால் நடிப்பை தொடர்வீர்களா? கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்துவிட்டு சென்று விட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - M.K.Stalin: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் கூட்டாட்சியே இருக்காது - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Jansirani Profile: திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்? யார் இந்த ஜான்சிராணி?