தேனி மாவட்டம் பெரியகுளம் கெங்குவார்பட்டி ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளரும் தேனி மக்களவை வேட்பாளருமான டி.டி.வி. தினகரன் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்.




பூஜை போட்டு பரப்புரை ஆரம்பித்த டிடிவி:


தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பாராளுமன்ற  தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடுவதற்காக அமமுக பொதுச்செயலாலரும் தேனி மக்களவை தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் சாமி தரிசனம் செய்தார்.


Delhi liquor Case: டெல்லியே அதிரும் மதுபான கொள்கை வழக்கு என்றால் என்ன? முதலமைச்சர் கைது ஏன்?




அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு :


இதனைத் தொடர்ந்து  பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அவர் பேசும்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக வேட்பாளர்களாக தேனியில் டிடிவி தினகரன், திருச்சியில் செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவித்தார். மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி மூலம் பெற்றுத் தருவேன். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு குரு நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லை. மக்கள் செல்வர் என்ற பட்டம் தேனி தொகுதி மக்கள் தான் வழங்கினார்கள். டிடிவி என்றால் தொகுதிக்கு தவறாமல் வருபவர் என்ற விளக்கமும் தேனியில் தான் அறிவித்தனர்.


NTK Candidates: தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட் - டாக்டர் டூ விவசாயி




Delhi liquor Case: டெல்லியே அதிரும் மதுபான கொள்கை வழக்கு என்றால் என்ன? முதலமைச்சர் கைது ஏன்?


யாரையும் போட்டியாக நான் கருதவில்லை - தினகரன்:


கடந்த காலங்களில் திமுக அளித்த தேர்தல் அறிக்கையை போல தற்போது மக்களை ஏமாற்ற முடியாது. அனைத்து நாடுகளும் பணவீக்கத்தில் சிக்கியுள்ள நிலையை, மோடியின் ஆட்சியால் இந்தியா சிறப்பாக இருக்கிறது. வரும் காலங்களிலும் பாஜகவுடன் அமமுக கூட்டணி தொடரும். ஆரம்பத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும், அதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டதை அந்த எண்ணம் தோன்றியதாகவும் தெரிவித்தார்.


மேலும் தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், மக்கள் என்னை வெற்றியடைய செய்வார்கள் என்றும் இதே போல் ராமநாதபுரத் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வமும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் ஜி கல்லுப்பட்டி மற்றும் ஜி கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் தனது முதல்  பிரச்சாரத்தை தொடங்கினார்.