மதுரையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ளது தெற்குதெரு கிராமம். மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள்  வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த நொண்டிச்சாமி என்பவர் தூய்மை பணியாளராக  வேலை செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நொண்டிச்சாமி அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பாண்டியராஜனை கைது செய்யக்கோரி  நொண்டிச்சாமி உறவினர்கள் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



இது குறித்து மேலூரைச் சேர்ந்த நபர்கள், “நொண்டிச்சாமி தெற்குதெரு ஊராட்சியில்  தூய்மை பணியாளராக இருந்துவருகிறார். நேற்று சாயங்காலம் அதே ஊரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடன்  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாண்டியராஜன் உருட்டுக்கட்டையால் நொண்டிச்சாமியை தாக்கியதில் நொண்டிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து நொண்டிச்சாமி யின் உறவினர்கள் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 








இதனைத் தொடர்ந்து  மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் பல  மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நொண்டிச்சாமி யின் உடலை கைப்பற்றிய மேலூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது" என தெரிவித்தார்.




மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை : மூளை வாஸ்குலர் குறைபாடுகளுக்கு சிகிச்சை.. அரசு மருத்துவமனையின் சாதனை!

தெற்குதெரு கிராமத்தில் ஏற்கனவே பல்வேறு சாதி மோதல்கள் காரணமாக பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தற்போது தூய்மை பணியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மேலும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.