சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடியில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஹெச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிகழ்வுகளில் சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு தொண்டர்களிடம் பேசி வருகின்றனர். சமீபத்தில் மானாமதுரை அருகே வெள்ளக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.


அப்போது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு 'கட்சியில் வளர்ச்சி அடையவில்லை,. முறையாக கட்சி கூட்டத்திற்கு அழைப்பு யாருக்கும் வருவதில்லை' என பல குற்றச்சாட்டுகளை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம் 'நிறுத்துங்கள்' என வலியுறுத்தினார். வேலு தொடர்ந்து பேசியதால்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது ‌. ப.சிதம்பரம் பேசுவதை குறுக்கிடவே வாக்குவாதம் கடுமையானது. ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்த நிர்வாகியிடம், ”நீங்கள் போய் மேடையில் அமருங்கள். ‌ நான் உங்கள் நாற்காலியில் அமர்ந்து ‌கொள்கிறேன்‌‌” என்று கூறினார்.


கோபம் அடைந்த கட்சி நிர்வாகி, சிறிது நேரத்தில் தான் அமர்ந்திருந்த  நாற்காலியை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் பாண்டி வேலு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

 

மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி வெளியிட்ட அறிக்கையில் “தாங்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறீர்கள். 11.09.2021 அன்று மானாமதுரை வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பசிதம்பரம் அவர்கள் தலைமையில் நடந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாண்புமிகு முன்னாள் நிதி அமைச்சர் அவர்கள் தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பளித்து பேசினீர்கள் தொடர்ந்து பலர் பேச முற்படும்போது அவர்களுக்கு இடையூறு செய்கின்ற வகையிலும் நடந்து கொண்டீர்கள் அப்போது நிதி அமைச்சர் அவர்கள் ஒழுங்கினமாக பேசக்கூடாது என்று அறிவுறித்தியும் நீங்கள் அதையும் மீறி தொடர்ந்து பேசி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள். மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான் சொல்லியும் கேட்காமல் கட்டுப்பாடு இன்றி நடந்து கொண்டீர்கள். எனவே மானாமதுரை தொகுதியின் உள்ள வட்டார நகர நிர்வாகிகள் தாங்கள் செயலை வண்மையாக கண்டித்து திரு. பாண்டிவேல் செயற்குழுஉறுப்பினர் அவர்களை கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வழியுறுத்தி உள்ளார்கள், அதன் அடிப்படையில் 13.09.2021 முதல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளீர்கள். மேலும் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளீர்கள். இது சம்மந்தமாக விளக்கத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தெரிவிக்குமாறும், தவறும் பட்சத்தில் தங்கள் மீது கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன், மானாமதுரை நகர வட்டார கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறேன். 

 

என குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்நிலையில்  காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு குழு உறுப்பினர் பாண்டிவேலு  கூறுகையில் 'நான் பல வருடமாக கட்சியில் இருக்கிறேன் கட்சிக்காக உழைத்து பாடுபட்டு கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சி மானாமதுரையில் முறையாக செயல்படவில்லை.


  முறையாக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை கூட கொடுப்பதில்லை. இது குறித்து தான் தெரிவித்தேன். இந்நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளேன். இது குறித்து மேல் இடத்தில் பேசுவேன்” என தெரிவித்தார்.