மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்ய போதிய பீல்டுமேன்களும் இல்லை ,  வாகனங்களுக்கு பெட்ரோலுக்கு நிதியும் இல்லை என கரும்பு விவசாயிகள் குற்றச்சாட்டு.


பதிவுகள் பாதிப்பு


மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் தாலுகா, திண்டுக்கல் நத்தம் தாலுகா ஆகிய பகுதிகளில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. இங்கு பயிடரிப்படும் கரும்புகள் மதுரை அலங்கநல்லூர் தேசிய சர்க்கரை ஆலைக்கு கொண்டுசெல்லப்படும்.  இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை கடந்த 2019ம் ஆண்டு மூடப்பட்டது. அதன்பின்பு தற்போது வரை ஆலை செயல்படவில்லை.  இதனிடையே ஆலை செயல்படாத நிலையிலும் ஆண்டுதோறும் சர்க்கரை ஆலைக்குட்பட்ட விவசாய பகுதிகளில் கரும்பு பதிவு செய்யப்பட்டது. இந்த ஆலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக கரும்பு பதிவுகளை செய்யும் பணிகளுக்காக 13 பீல்டுமேன்கள் ( கள அலுவலர்கள்) பணியில் இருந்துவந்துள்ளனர்.


பெட்ரோல் போடுவதற்கு கூட நிதி இல்லை


இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தற்போது கரும்பு பதிவு செய்யும் பணிகள் தொடங்காத நிலையில் கரும்பு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கரும்பு பதிவு பணிகளை தொடங்க கோரி   கரும்பு விவசாயிகள் அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை பொறுப்பு அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கரும்பு பதவிற்கான பணிகளில் ஈடுபடுவதற்கான கள அலுவலர்கள் ( பீல்டுமேன்கள்) இல்லாத நிலையில், ஒரு பீல்டுமேன் இருக்கும் நிலையில் அவரது வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்கு கூட நிதி இல்லாத சூழல் உள்ளதாகவும் கூறி உடனடியாக. கரும்பு பதிவை தொடங்குவதற்கான தற்காலிக பீல்மேன்களையாவது நியமித்து பணிகளை தொடங்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.


போராட்டம்


இது குறித்து பேசிய கரும்பு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பழனிச்சாமி...,”அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையில் கரும்புகளை பதிவு செய்வதற்கான பணிகள் தொடங்காத நிலை உள்ளதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளோம் எனவும், அதனால் விவசாயகடன் வாங்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே கரும்பு பதிவு செய்ய பீல்டு மேன்களை நியமித்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் இதனை கண்டித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.


இதைப் படிப்பு மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பல லட்சம் மதிப்பிலான பம்பு செட் மோட்டார் காப்பர் வயர்கள் தொடர் திருட்டு - மதுரையில் விவசாயிகள் கவலை


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?