கொடைக்கானல் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு முதல் தவணை   கொரோனா தடுப்பூசி  100 சதவிகிதம் செலுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் பிரபலமான சுற்றுலா தலங்களில் தனிச்சிறப்பை பெற்றிருக்கிறது. கொடைக்கானல் பகுதியில் உள்ள மலைகளின் அழகு பார்ப்பவர்களின் கண்களை கவரும்  அனைவருக்கும் பிடித்தமான ஒரு சுற்றுலா தலமாகும். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என பல்வேறு தரப்பினர் வருவதுண்டு. கொரோனா வைரஸ்சின் பரவல் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட வழிவகுத்தது. 



கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்த வேண்டுமென அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வரும் நிலையில், தடுப்பூசிகளின் அவசியம் பற்றியும் கூறி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்னிலையில் பல்வேறு பகுதிகளில் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் உள்ள 24 ஆயிரம் பேருக்கும் முழுமையாக முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சுமார் 60 லட்சம் மதிப்பில் நாள் ஒன்றுக்கு  500 லிட்டர் ஆக்சிஜன்  உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மைய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை   திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் பார்வையிட்டார் .




இதனை தொடர்ந்து கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆக்சிஜன் மையம் அமைக்கப்படுவதாகவும், இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தெரிவித்தார், மேலும் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் வசிக்கும் 24 ஆயிரம் பேருக்கும் 100 சதவிகித முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அடுத்த வாரத்தில் பணிகள் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.



மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்ப்பதற்கு  சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது இந்நிலையில் தனியார் நிறுவனங்களோ அல்லது வேறு இடங்களிலோ சுற்றுலா பயணிகள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்,கொடைக்கானல் மலைச்சாலைகளில்  மது அருந்தி விட்டு வாகனங்கள் இயக்கினாலோ அல்லது அதிவேகமாக வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


 https://bit.ly/2TMX27X*


கொடைக்கானலுக்கு செல்ல மீண்டும் தடை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


கொடைக்கானல் : விதிகளை பின்பற்றாமல் வருகைதரும் சுற்றுலா பயணிகள்.. காற்றில் கலக்கும் லாக்டவுன் விதிகள்..!