கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு சுற்றுலாதளங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கொரோனா இரண்டாம் அலை பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு  வருகைதந்த வண்ணம் உள்ளனர். கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவலுக்கான எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன். கொடைக்கானல் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Continues below advertisement



கொடைக்கானலுக்கு வெளி மாவட்டத்தினர் வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரச காரணங்களுக்காக கொடைக்கானலுக்கு செல்ல விரும்புவோர் 72 மணிநேரத்திற்குள் கொரோனா  மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதற்கான நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை  கொடைக்கானல் நுழைவாயில்  சோதனைச்சாவடியில் கொடுத்தால் மட்டுமே உள்ள உள்ளே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொடைக்கானலில் சுற்றுலாபயணிகள் அதிகம் கூடும் இடங்களான வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, ஐந்து வீடு நீர்வீழ்ச்சி, கூக்கால் நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் செல்ல முழுத்தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் மலை பகுதிகளில்  உள்ள பட்டா இடங்கள், அரசு வருவாய் நிலங்களில்  தற்காலிகமாக  கூடாரம் அமைத்து தங்குவோர் மீதும், தங்குவதற்கு ஏற்பாடு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



பொதுமக்கள் நலன்கருதி அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா  தொற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது.



இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளையும் சுற்றுலா தலங்களின் வரும் வருமானத்தைக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் தற்போது இயல்பு வாழ்க்கையில் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் இது போன்ற கட்டுப்பாடுகளால் மேலும்பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


 


வீடியோ பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


 


நாங்க வேற மாதிரி.. கெத்து காட்டும் தேனி இளசுகள் | Theni | Jallikattu Vadam | Jallikattu |