1. காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி குணா கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண் அடைந்தார். இந்நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், குணாவுடன் அந்த பகுதியில் தொடர்பில் இருந்த 40 போலீசார் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் 16 போலீசார் தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப் படையில் பணியில் சேர்ந்தனர். தற்போது தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

2. ”தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் தான், பல்வேறு சமூக தல இயக்கங்களுடன் இணைந்து மீனவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் உள்பட பல்வேறு சமூகநலப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். கடந்த 2018ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றேன்.  இதுபோல் சமூக சேவகர் ஸ்டேன் சாமிக்கு கடந்த 2021 ஜூலை 17ல் அஞ்சலி செலுத்தப்பட்டது. அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக போலீசார் என்மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த இருவழக்குகளையும் ரத்துசெய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மட்டுமின்றி குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்து தனித்தனி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 

3. நெல்லையில் கொலை முயற்சி. பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.



 

4. நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் 4ம் நாளான நேற்று மட்டும் 43 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 81 பேர்மனு அளித்துள்ளனர். இன்று முதல் மனு தாக்கல் சூடு பிடிக்கும் என தெரிகிறது.வேட்புமனுதாக்கல் 4ம் தேதி முடிகிறது.

 

 

5. ராஜபாளையத்தில் நேற்று கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் சாலையில் படுத் திருந்த லோடுமேன் பலி யானார். இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டார்.



6. விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

 

7. மதுரையில் கிழக்கு அரசு பள்ளியில் பள்ளி ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பள்ளி மகேஷ் பொய்யாமொழி திடீர்  ஆய்வு மேற்கொண்டார்.



8. திருச்சி மாவட்டத்தில் கண்காணிப்பு குழு அமைத்து, தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவும் கருத்தடை செய்யவும் தெரு நாய்களுக்கு தேவையான தங்குமிடம் குடிநீர் மற்றும் உணவு வசதிகளை செய்துதரக் கோரிய வழக்கு.

 

9. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் மகாமகம் குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற தடை கோரிய வழக்கு. தஞ்சை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.



10. சமூக சேவகர் பதவி, உளவியலாளர் பதவிகளை தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைச்சாலை, சீர்திருத்த பள்ளிகள், புதுக்கோட்டை மற்றும் அனைத்து சிறப்பு மகளிர் சிறைச்சாலைகளில் நியமனம் செய்ய கோரிய வழக்கு... தமிழ்நாடு உள்துறை கூடுதல் செயலர் மற்றும் சிறை மற்றும் சீர்திருத்த துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.