1. மதுரை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 1200 இடங்களில் நேற்றிரவு 8: 00 மணி வரை நடந்த இலவச சிறப்பு முகாமில் 82, 346 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

 

2. தூத்துக்குடி  நாசரேத் திருமண்டல திருச்சபை தேர்தல் தொடர்பான விவகாரத்தில் "என்னை யாரும் கடத்தவில்லை" என பிஷப் தேவசகாயம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

 

3. 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை அதிகரிக்க உள்ளது. மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக ரூ1 ல் இருந்து ரூ2 ஆக தீப்பெட்டி விலை உயர்த்தப்படுகிறது என, விருதுநகர், தூத்துக்குடி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை டிசம்பர் 1முதல் நடைமுறைக்கு வருவது குறிப்பிடதக்கது.

 

4. தொடர் கன மழை எதிரொலியால் தேனி, திண்டுக்கல் , மதுரை உள்ளிட்ட  ஐந்து மாவட்ட நீர் அதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியுள்ளது.

 

5. ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை வன காவல் நிலையம்  படைக்கு ரகசிய தகவலின் பேரில்  தேவிபட்டணம் பகுதியில் சரகர் மற்றும் வனகாப்பாளர்கள் காலை ரோந்து சென்று சோதனை  செய்யப்பட்டது. அப்போது பதப்படுத்தப்பட்ட கடல்  அட்டை  வைத்திருந்த இரண்டு நபர்களைக் கைது செய்யப்பட்டது . அவர்களிடம்  சுமார் 500 கிலோ கடல் அட்டை மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

 

6. சிவகங்கை அருகே விவசாயப் பயன்பாடுகளுக்காக பழைய இரும்புப் பொருட்களை பயன்படுத்தி ஹைதராபாத் ஐ.ஐ.டி மாணவர் பேட்டரி சரக்கு வாகனத்தை தயாரித்துள்ளார்.

 

7. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே காளாப்பூர் திருநகரைச் சேர்ந்தவர் வளர்மதி (55). இவர் அந்த ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று சாலையோரம் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது திருப்பத்தூரிலிருந்து சிங்கம்புணரிக்கு வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வளர்மதி மீது மோதியது. அதைத் தொடர்ந்து அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பத்தை அமைத்து மின் விநியோகத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

8. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டுத்துப்பாக்கி விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

9. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கொலையாவதை, ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாக கூறி வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி மதுரையில் கண்டனர் தெரிவித்துள்ளார்.

 

 

10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 17 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75101-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 24 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73709-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1169 இருக்கிறது. இந்நிலையில் 223 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.