1. வண்டி எண் 06655 மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நவம்பர் 4 முதல் மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையை இரவு 07.30, 07.42, 07.55, 08.10, 08.25, 08.47, 09.02, 09.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 07.15, 07.25, 07.40, 07.56, 08.10, 08.32, 08.52, 09.10 மணிக்கு புறப்படும்.
2. வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு ரயில் நவம்பர் 1 முதல் விருதுநகரிலிருந்து அதிகாலை 03.15 மணிக்கு பதிலாக அதிகாலை 03.00 மணிக்கு புறப்படும்.
3. வண்டி எண் 06101 சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் நவம்பர் 1 முதல் திண்டுக்கல், மதுரை ஆகிய நிலையங்களில் இருந்து முறையே நள்ளிரவு 11.40, 12.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நள்ளிரவு 11.05, 12.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06102 கொல்லம் - சென்னை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08.10 மணிக்கு பதிலாக இரவு 08.05 மணிக்கு புறப்படும்.
4. வண்டி எண் 08496 புவனேஸ்வர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நவம்பர் 4 முதல் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 04.25, 05.15, 06.30, 06.38, இரவு 07.05, 07.45, 08.10, 08.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 04.15, 05.05, 05.55, 06.04, 06.35, இரவு 07.00, 07.25, 07.55 மணிக்கு புறப்படும்.
அதே போல் மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோரின் வசதிக்காக மதுரை ரயில் நிலையத்தில் ஏற்கனவே பேட்டரி கார் வசதி இருந்தது. இந்த வசதிக்கு பயணிகள் கட்டணம் செலுத்தி வந்தனர். கொரோனா தொற்று காலத்தில் இந்த வசதி நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது பயணிகள் பயணிகள் வசதிக்காக மதுரை ரயில் நிலையத்தில் இரண்டு பேட்டரி கார்கள் சேவை சனிக்கிழமை (23.10.2021) முதல் துவங்கியுள்ளது இந்த சேவையை பயணிகள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த சேவை ரயில் நிலையத்தில் வெளிப்புறத்திலிருந்து நடைமேடைகளுக்கு செல்லவும், ரயிலில் பயணித்து வரும் பயணிகள் நடை மேடையிலிருந்து ரயில் நிலைய வெளிப்புறப் பகுதிக்கு வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்...! - மதுரை மாவட்ட மக்களுக்கு நடிகை சினேகா வேண்டுகோள்...!