மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 26 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,041 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 24 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73647-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை. இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1169 இருக்கிறது. இதனால் 225 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் 15,21,748 பேருக்கு மதுரை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 18,61,964 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 1,92,840 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.  இந்நிலையில் மதுரை மாவட்ட மக்கள் வரும் சனிக்கிழமை அன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடிகை சினேகா வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் வரும் சனிக்கிழமை அன்று வாக்குச்சாவடி மையங்கள் வாரியாகவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மதுரையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மதுரை மக்கள் கலந்துகொண்டு தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என கோரி நடிகை சினேகா பிரசன்னா மதுரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த. வீடியாவை மதுரை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.



 


 

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவு தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தற்போது நடிகை ஸ்நேகாவின் வீடியோ மூலம் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று பலரும் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.  நடிகை சிநேகா பேசிய விழிப்புணர்வு வீடியோ மதுரையில் வாட்சப், பேஸ்புக்கில் வைரலாக பரவிவருகிறது.