மதுரை அரசரடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், ”மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாள் அல்லது தமிழர் இறையாண்மை நாளாக கொண்டாட வேண்டும், தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும் என்பதை வி.சி.க வலியுறுத்துகிறது. நவம்பர் 1-ஆம் தேதி சங்கரலிங்கனாருக்கு மணி மண்டபம் அமைப்பது குறித்தும்  மற்றும் அவரது பெயரில் தமிழர் இறையாண்மை நாளில் விருது அறிவிக்க வேண்டும் எனவும் வி.சி.க வலியுறுத்துகிறது”.

 

மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்...! - மதுரை மாவட்ட மக்களுக்கு நடிகை சினேகா வேண்டுகோள்...!



கொரோனா காலகட்டத்தில் கைதட்டியது விளக்கேற்றியது  குறித்து பிரதமர் பேசியது குறித்த கேள்விக்கு..”

அந்த செயல் சரியில்லை என்பதை பிரதமர் உணர்ந்ததற்கு நன்றி எனவும், இந்த விவகாரத்தில் பிரதமர் தன்னிலை விளக்கம் என்ற பெயரில் எதிர்கட்சி மீது பழி சுமத்தப்பார்க்கிறார்.  வேறு எந்த நாட்டிலும் இல்லாத அணுகுமுறையை பிரதமர் செய்ததை பொதுமக்கள் மத்தியிலேயே வேடிக்கையாகவும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது”. காடுகளை அழிக்கும் வகையில் உள்ள மத்திய அரசின் வனப் பாதுகாப்பு சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என விசிக வலியுறுத்துகிறது.

 

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எதற்கு என அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும், இது குறித்து முழுவிவரம் அறிந்த பிறகு கருத்துசொல்கிறேன். இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை தாக்கி சித்திரவதை செய்து கொலை செய்யும் நிலை தொடர்ந்துவருகிறது. இதனை இந்திய அரசு  வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது இலங்கை அரசுக்கு துணைபோகும் நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கோள்வது கண்டனத்துக்குரியது.

 

இலங்கை கடற்படை மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும்,  இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழ்நாடு மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க வேண்டும், இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.