1. தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 58 ம் கிராம பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

 

2. மதுரை அண்ணாநகர்  பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

 

3. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேலங்குடியில் 4 தலைமுறை கண்ட 132 வயது மூதாட்டி இறந்தார்.

 

4. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளியூர் கிளையில் ரூ. 1கோடியே 47 லட்சம் மதிப்பிற்கு போலி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

5. மதுரை உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்றாலும் வெற்றி பெறக்கூடிய திறன் பாஜகவுக்கு உள்ளது. மதுரை மேயர் பதவியை பெற அழுத்தம் கொடுப்போம்.  என மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர். சரவணன் பேட்டி அளித்தார்.

 

6. நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் ஒப்பந்த பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என மதுரை மாநகராட்சி அறிவிப்பு.

 

7. "மேகமலை காப்ப கத்தில் டிசம்பர் 25 முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கும்.'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆனந்த் தெரிவித்தார்.

 

8. ராமநாதபுரத்தில் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா் கொள்ளையடிக்க முயன்றபோது, போலீஸாா் வந்ததால் தப்பியோடிவிட்டாா். இதனால் ரூ.40 லட்சம் தப்பியுள்ளது.

 

9. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் மவுனம் சாதிக்காமல் பதில்தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் வைகை அணையில் தெரிவித்தார்.

 

 

10. கொரோனா தொற்று எதி ரொலியாக சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டவை தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்களாக வழக்கமான கட்டணத்துடன் இயக்கப்படவுள்ளன.