தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது வைகை அணை. இந்த அணையின் நீரை கொண்டு மதுரை ,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் விவசாய தேவைகளுக்கும் பயன்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வைகை அணையையும் வந்து சேரும், இந்த நிலையில் சென்ற மாதத்தில் இருந்து தற்போது வரை முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.




மேலும் தேனி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்த நிலையில் வைகை அணையின் நீர்வரத்து கூடுதலாக இருந்து வந்த நிலையில் வைகை அணையின் 71 அடி உள்ள நிலையில் 69 அடியை எட்டிய நிலையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அணையின்  முழு கொள்ளளவை எட்டியதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் வைகை அணை நீர்மட்டம் 67 அடி உயரம் போது 58ம் கால்வாய் மதகு வழியாக தண்ணீர் வெளியேறும் படி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 69.9 அடியாக உள்ளது.




இந்த நிலையில் இன்று விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இக்கால்வாய் வழியாக நீர் திறக்கப்பட்டதால் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பலன் பெறும் எனவும் கால்வாய் மூலம் நேரடி பாசனம் இல்லாத நிலையில் 33 கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் நிலத்தடி நீரை கொண்டு விவசாயத்தை தொடர முடியாததால் இன்று முதல் ஒரு மாதத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும்  வைகை அணையிலிருந்து 58 கால்வாய் பாசனத்திற்காக 300 கன அடி தண்ணீர் இன்று முதல் நாள் ஒன்றுக்கு 150 கன அடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப இன்றைய தினம் முதல் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட 1912 ஏக்கர் விவசாய நிலங்களும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 373 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 785 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.




எனவே விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூப்பில் வீடியோக்களை காண